கார்த்திகைக் கவசம் | Karthigai Kavasam

கார்த்திகைக் கவசம்



காப்பு

விநாயகர் துதி

மத்திக்கு வித்தாய் முளைத்த முழுப்பொருளாஞ்
சித்தி விநாயகனைச் சேர்

சுப்பிரமணியர் துதி

நெஞ்ச முருகித் துதிப்போர்க்கு நீணிலஞ்சேர்
பஞ்சமா பாவம் பறக்குமே - யெஞ்ஞான்றுஞ்
சீர்த்தியோடு செல்வமிகுஞ் செவ்வேள் முருகன்றன்.
கார்த்திகை விரத நோக்கிக் கதிபெறச்
சீர்த்தி மெய்யடியார் சிந்தையில் விளங்குஞ்

சரவணபவனெனுஞ் சடாட்சரப் பொருளாம்
பரமசற் குருபரன் பழனியங் கிரியோன்

காலிற் சதங்கை கலகல வென்ன
வேற்கை பிடித்து வேலவன் வருக

சேவலங் கொடியுடைச் சேவகன் வருக
பூவலன் வருமயில் புண்ணியன் வருக

அரனார் விழிப் பொறி யாகியோன் வருக
சரவணப் பொய்கையில் தவழ்ந்தோன் வருக

அறுமீன் திருமுலை அருந்தினோன் வருக
வரைமகள் மகனாய் வந்தோன் வருக

நான் முகனைச்சிறை நாட்டினோன் வருக
மான்மழு தரித்தோன் மதலை வருக

தராதலம் படைத்த சண்முகன் வருக
மராமர மெய்தோன் மருகன் வருக

துரை வீரவாகுத் துணைவன் வருக
சிருட்டி செய்தேவ தேவன் வருக

சூரன் குலத்தைச் சுட்டோன் வருக
சோர கிரௌஞ்சந் தொலைத்தோன் வருக

தெள்ளிய தேவ சேனாதிபன் வருக
வள்ளி தெய்வானை மணாளன் வருக

ஆயிரங் கண்ணனருஞ் சிறை நீக்குந்
தாயினுமினிய தயாநிதி வருக

குருமுனிக் கருளுங் குருபர னாகி
வருமொரு சுப்பிரமணியன் வருக

பெருகு நற் கீரர் பெருமான் வருக
அருணகிரிக் கங்கருளினன் வருக

சரவணபவ ஓம் ஐயுங் கிலியுஞ்
சவ்வும் ரீம்ஸ்ரீம் தற்பரன் வருக

ரவணபவ ஐயுங்கிலியும் ரீம்
பவரும் ரீயும் ஸ்ரீம் ஓம் பராபர

வணபவ சரவ வங்சிங் சவ்வும்
அணி கொள் ரீம் ஓம் ஐயுமா னவனே

ணபவ சரவ நாயக சவ்வும் ஹிரியும்
சுபமுனுஞ் ஸ்ரீம் ஓம் சோதி ஐயுங்கிலியும்

பவசர வணரீம் பரவிய ஸ்ரீம்ஓம்
சிவகுரு ஐயுங்கிலியுஞ் சவ்வுமான

வசபுரவணபஸ்ரீம் மருவிய ஓம்ஐயும்
நிஜமுறும் கிலீம் சவ்வும் ரீம்நிலையாகிப்

பகைவரிகலனும் பகைவன் வருக
மகுடமுடி யானும் மருவி யிலங்க

நெற்றியினீறு நீண்ட புருவமும்
வெற்றிவேற் படைபோல் விழிகளீராறும்

காதிலீ ராறு குண்டலங் காண
வேதப்பவழ வாய்க் கனி விளங்க

மார்பில் பலமணி மலர்ந்த கடம்பின்
தாரொடு முப்புரி நூலுந் துலங்கக்

கையிலீராறு படைகள் தாங்க
துல்ய திருவயி றுந்தி ஜொலிக்க

இடைதனில் பொன் பட்டாடை யிலங்க
அடியிணைத் தண்டைச்சிலம்புகள் ஆர்ப்ப

வருவாய் அடியேன் வழிபட வருவாய்
வருவாய் அடியேன் வாழ வருவாய்

வருவாய் வருவாய் வானவரரசே
வருவாய் வருவாய் வாலிப முருகா

அம்முடன் உம்மும் ஹரிஓம் ஐயும்
மம்முடன் கிலியும் மருவிய சவ்வும்

நலமிகு ரீயும் ஸ்ரீயும் நயந்து
நிலை தர வேநீ நின்ற ஒவ்வும்

மவ்வும் வவ்வும் வரந்தரும் பொருளே
நவ்வும் சிவ்வும் நாரணன் மருகா

அஆ இஈ உஊ எஏ ஐ
ஒஓ ஒளவென ஒளிர்தரு மரசே

ராரா ராரா ராரா ராரா 
ரீரீ ரீரீ ரீரீ ரீரீ

ரங் ரங் ரங் ரங் நாயக ஸ்ரீம்ஓம்
ரிங் ரிங் ரிங் ரிங் ரீங்கார மந்திரம்

ஆயிரத் தெட்டா மண்டபமும் மாண்ட
தீயசூரரை ஜெயித்த சேவகா

சிவ சிவ சிவ சிவ சிவகுரு நாதா
பவ பவ பவ பவ பன்னிரு கையா

நம நம நம நம நமதளிர் கடம்பா
கம கம கமவென கனமே ளங்கள்

கண கண கணவென கைத்தாளங்கள்
தண தண தணவெனத் தண்டைச் சிலம்புகல்

கல கல கலவெனக் கலாப மயில்மேற்
சல சல சலவெனத் தனிநட மாடி

நக நக நகவென நானிலமெங்குந்
தக தக வெனச் சாரி வருவாய்

சரணுனக் குடல் பொரு ளாவியு மீந்து
சரணமென் போரைச் சரணது காக்க

சிரமுத லடிவரைச் செவ்வேல் காக்க
சரவணபவனே சடாட்சர மூர்த்தி

அங்க முழுது மயில்வேல் காக்க
பங்கம் வராமல் பெருவேல் காக்க

ஜீவனை யுவந்து திகழ்வேல் காக்க
தாமச மின்றித்தமியேன் பாட

நாமகளென்ற ணாவி லிருக்க
பூமக ளென்னிடம் பொற்புற்றிலங்க

ஞாயிறு திங்கள் சேய் நற் புந்தி
தூயசுக் கிரன்குரு சுகன்பணி கேது

நன்மைய தாக நாயடியேன் முன்
பொன்மய மாக்கும் புனிதனே காக்க

காக்க காக்க கடம்பா காக்க
தீர்க்க தீர்க்க தீவினை பலவும்

ஆர்த்தி யாம்நம சிவயமா மதனால்
பார்த்தென தங்கம் பழுதறக் கட்டு

எட்டுத் திசையு மீரைந்து கோணமும்
கட்டு கட்டு கருதலர் கதற

வெட்டு வெட்டு வெவ்விய கூற்றினைச்
சொட்டு சொட்டெனச் சோரிகள் சொரிய

பூதமும் முனியும் போர்தரு பேயும்
வேதனை செய்யும் வேதாளத்துடன்

காட்டேரி யிருளன் கறுப்பன் குறளிக்
கூட்டமொ டிருசி குட்டிச் சாத்தி

கல கல கலவெனக் கலாப மயில்மேற்
சல சல சலவெனத் தனிநட மாடி

நக நக நகவென நானிலமெங்குந்
தக தக வெனச் சாரி வருவாய்

சரணுனக் குடல் பொரு ளாவியு மீந்து
சரணமென் போரைச் சரணது காக்க

சிரமுத லடிவரைச் செவ்வேல் காக்க
சரவணபவனே சடாட்சர மூர்த்தி

அங்க முழுது மயில்வேல் காக்க
பங்கம் வராமல் பெருவேல் காக்க

ஜீவனை யுவந்து திகழ்வேல் காக்க
தாமச மின்றித்தமியேன் பாட

நாமகளென்ற ணாவி லிருக்க
பூமக ளென்னிடம் பொற்புற்றிலங்க

ஞாயிறு திங்கள் சேய் நற் புந்தி
தூயசுக் கிரன்குரு சுகன்பணி கேது

நன்மைய தாக நாயடியேன் முன்
பொன்மய மாக்கும் புனிதனே காக்க

காக்க காக்க கடம்பா காக்க
தீர்க்க தீர்க்க தீவினை பலவும்

ஆர்த்தி யாம்நம சிவயமா மதனால்
பார்த்தென தங்கம் பழுதறக் கட்டு

எட்டுத் திசையு மீரைந்து கோணமும்
கட்டு கட்டு கருதலர் கதற

வெட்டு வெட்டு வெவ்விய கூற்றினைச்
சொட்டு சொட்டெனச் சோரிகள் சொரிய

பூதமும் முனியும் போர்தரு பேயும்
வேதனை செய்யும் வேதாளத்துடன்

காட்டேரி யிருளன் கறுப்பன் குறளிக்
கூட்டமொ டிருசி குட்டிச் சாத்தி

சூனியம் பம்பும் சுடலை மாடனும்
மேனியி லனுகும் வெகுவித மான

கணமொடனைத்து மென்றனைக் கண்டால்
அணுகா தோடவென் னருகில் வருவாய்

கிரந்தி குட்டங் கிருமிகள் பரவுஞ்
சிரங்கு படுவன் சிலந்தி கடுவன்

மூலம் பவுந்திரம் மூத்திரக் கிரிச்சரங்
காலரை யாப்புக் கட்டிப் புண்களும்

பங்கப் படுத்தும் லிங்கப் புற்றும்
பல்வலி காசம் படர் தாமரைகள்

வில்லெனும் வாத முலைவிப் பிருதி
பிளவை குடைச்சல் பெரியதோர் இருமல்

தலைவலி சூலை சாற்றுங் குலைநோய்
நூலோர் நுவலும் நொறுக்கு நோய் முதலா

நாலா யிரத்து நானூற்று நாற்பத்
தெட்டெனும் பிணிகள் என்முகங் கண்டால்

அஞ்சி நடுங்கியலைந்துலைந் தோடவும்
தஞ்சமென் போர்முன் தாளினைக் காட்டி

நரிகள் செந்நாய்கள் நாக மோந்திகள்
புலிகள் கரடிகள் பூனைகள் மற்றும்

விரியன் கத்திரி விரியன் கருந்தேள்
பொறி கொள்ளரவு பூரான் பூச்சிகள்

செந்தேள் செய்யான் பலவிஷ ஜெந்துகள்
சந்த வண்டு கடிகள் சகலமும் தீர

சுளுக்குக் கட்டிகள் சொறிகள் முதலாய்ப்
பிள்ளைக ளைத்தொடர் பேயந்தி சந்திகள்

பக்ஷிகள் முட்டுகள் பறவை தோஷங்கள்
நட்டகுளி தோஷங்கள் நண்ணிநாடாமல்

எல்லாப் பிணியு மென்றனைக் கண்டால்
நில்லா தோட நின்றிருக் கரத்தால்

முறிமுறி முறிமுறி மூன்று துண்டா
வறு வறு வறுவறு வறுத்திடு தணலாய்ப்

பொரிபொரி பொரிபொரி பொரிபொரி பொரிய
எரிஎரி எரிஎரி எரிஎரி நீறாய்

நசிநசி நசிநசி நசிநசி பிணியை
மசிமசி மசிமசி மசிமசி விஷத்தை

கவ்வும் விஷங்கள் கடுக விறங்க
எதிர்த்த சத்துரு வீரர் குலைய

என்றன் பவழினை யாவையு மெதிர்த்தே
யுன்றன் வடிவே லதனா லறுத்தே

மனவாக் கெட்டா தவனே மகிழ்வாய்
கனமெய்ஞ் ஞானங் கருத்தினிற் பதிவாய்

சத்துரு சங்கார சாமி நாதவேல்
மித்திருவாய் வந்து விரும்பிய பொருளைக்

கொடுத்தருள் புரிவாய் குழந்தை வேலவா
அடுத்தவர் தம்மை யாதரித் தருள்வாய்

கந்தா முருகா கார்த்திகை மைந்தா
சிந்தையுற் றுயரந் தீர்த்தருள் செய்வாய்

அன்பரைக் காக்கும் ஆறுமா முகனே
துன்ப மகற்றுஞ் சோதி விசாக

சூரசம் மார சுயம்பிர காசா
வீராதி வீரரா வேதவே தாந்தா

தெய்வ குஞ்சரி திவ்ய மணாளா
தையல் வள்ளியைத் தழுவிய மார்பா

சங்கரி யீன்ற சரவண பவனே
சங்கிரா மமெனுஞ் சைலொளி பவனே

சிந்தைநின் றிலங்கு திரிபுரை பவனே
செந்தமிழ் புனையுந் திகழொளி பவனே

பாவியென் றனது பரிபுரர பவனே
பாவியென் றனது பவமொழிப் பவனே

வாடிய மனத்தால் வளம் பெற வுன்மேற்
பாடும் பணிகள் பலித்திட வருவாய்

கணபதிக் கிளைய கண்ணிய சகோதர
தணிகைப் பதிவாழ் சண்முக ராயா

அடியார் மனத்தி லாடியெப் போதுங்
குடியா யிருக்குங் குரருபரமூர்த்தி

தந்தையும் தாயும் சத்குரு தெய்வமும்
உன்றனை யல்லா லுலகினி லெனக்கார்

குற்றங் குறைகள் கோடான கோடி
பற்றின னென்னைப் பார்த்தருள் செய்வாய்

உன்திரு நாமம் ஓதி வணங்கிட
அன்பு தழைக்க வருள்புரி யாதி

தாயாங்கந்தவுன் றாளினைப்பாட
மாயா மயக்க மாற்றி யருள் செய்

உனையனு தினமு முகந்திரு சரண்மேர்
றனைய னடியேன் சிறுவன் சாற்றிய

கார்த்திகைக் கவசம் கருதித் துதிப்போர்
தீர்த்தமாடித் திகழ்பட் டணிந்தோரர்

ஆசனத்திருந்தே யைம்புல னொன்றாய்
நேசித் தருட்டிரு நீறு புனைந்து

பரமன் கவசம் பக்திய தாகப்
பரணி கார்த்திகை ரோகினி பரவி

ஒரு நாள் மூன்று காலமு மோதி
உருச்சபித் திடவே யோடிடுந் தீவினை

உத்தமி சத்குண உமையவள் பாலா
சத்துஞ் சித்துந் தானே தானாய்

எள்ளி லெண்ணெயா யெங்கும் நிறைந்த
வள்ளல் சண்முக மணியே போற்றி

போரூர் மருவிய புனிதா போற்றி
பூவுலகம் வலம் வந்தோய் போற்றி

தகைதரு மிடும்பன் றனையே ஜெயித்து
குன்றுதோ றாடுங் குருவே போற்றி

நன்று செந்தூர் வாழ் நாதா போற்றி
திருவா வினன்குடி தேவே போற்றி

பழமுதிர்ச் சோலைப் பதியாய் போற்றி
அழலா யுதித்த வாறுமா முகனைப்

பூத மைந்தும் பொருந்த நிறுத்தி
மாதர்கள் மாயா மயக்க மறுத்துப்

பன்னிரு வருடங் குருபரன் தன்னை
யுன்னித் துதிக்க வூழ்வினை யொழிய

ஊழி காலமு மூவந்து சாயுச்சிய
வாழ்வளித் தருளும் மயிலோய் வாழ்

வாழி வாழி வள்ளி தெய்வானை
வாழி வாழி வடிவேல் வாழி

வாழி வாழி மாமயில் வாழிய
வாழி வாழிசே வலங்கொடி வாழிய

வாழி வாழிய வளரர் நவ வீரர்கள்
வாழி வாழி வாழி மெய் யடியார்

இறப்பொடு, பிறப்பு மெனையடை யாமல்
அறுத்தருள் செய்வா யையா சரணஞ்

சரணஞ் சரணஞ் சடாட்சரப் பொருளே
சரணஞ் சரணஞ் சடாட்சர மூர்த்தி

சரணஞ் சரணஞ் சரவண பவ ஓம்
சரணஞ் சரணஞ் சண்முகா வுனக்கே

ஸ்ரீ காஞ்சி சீனிவாச யோகியார் அருளிச் செய்தது

Comments